சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் பேச்சு: தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் திங்கட்கிழமைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக, கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்கள் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது மாநில துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. முதல்வருடனான சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: முதல்வரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம்.  விசிக சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் விசிகவுக்கு தேவையான தொகுதிகளை பட்டியலிட்டு, திமுக மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பாக 2, 3 நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் விசிகவுக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிற போது, விசிகவுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே தலைவர் கலைஞர் அதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களில் கூட அந்த சட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தமிழகத்தில் அத்தகைய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று முதல்வரின் கவனத்துக்கு கொண்டு ெசன்றோம். பேச்சுவார்த்தை முடிந்து 1ம் தேதிக்கு பிறகு விசிக சார்பில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

வாரிசு அரசியலை பற்றி பேச பாஜவுக்கு அருகதையில்லை: செல்வபெருந்தகை பேட்டி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

சொல்லிட்டாங்க…