சென்னையில் 26ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

தர்மபுரி, மே 4: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வரும் 26ம் தேதி சென்னை கோட்டையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம், நேற்று தர்மபுரியில் மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி, மாநில பொது செயலாளர் சுந்தரம், மாநில டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன், தர்மபுரி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், நாகராஜ், முனிராஜ், சுப்பிரமணி, லோகநாதன், குமார், மாரியப்பன், பழனி, செல்வம், மாது, பரமசிவம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மாது, மணி, விஸ்வநாதன், சேலம் மாவட்ட செயலாளர் பெரியண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆவின் நிர்வாகம் 1.5 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே, கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தனியார் பால் நிறுவனம் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குகிறது. ஆனால், ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவில்லை. துறையின் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், சட்டமன்ற கூட்டத்தொடரில் விலை உயர்த்தப்படவில்லை. பல்வேறு போராட்டம் நடத்தியும் முன்னேற்றம் இல்லை.

கோடையால் கால்நடை பராமரிப்பு செலவு, தீவன செலவு 200 மடங்கு உயர்ந்துவிட்ட.து. எனவே, ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை பசும் பாலுக்கு ரூ.42ம், எருமை பாலுக்கு ரூ.52 என உயர்த்தி வழங்கக்கோரி, வரும் 26ம்தேதி சென்னை கோட்டையில் விவசாயிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதில் மாநிலம் முழுவதுமாக இருந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு