சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்

டெல்லி: சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஒன்றிய, மாநில அரசுகள் நடையே நடைபெற்று வந்த சூழ்நிலையில் மாநில அரசு 4 இடங்களை தேர்வு செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அவற்றில் 2 இடங்களை ஒன்றிய அரசு தேர்வு செய்திருந்தது. பன்னூர், பரந்தூர் இதில் ஒன்றை மாநில அரசு இறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இந்த பதிலை தெரிவித்துள்ளார். மேலும் இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கான இடத்தை இறுதி செய்வார் என்று தங்கம் தென்னரசு கூறியிருந்தார். ஒன்றிய அமைச்சருடனான சந்திப்புக்கு பின் சென்னையில் முதல் தலைமையில் நடந்த ஆலோசனையில் இடம் உறுதியானதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பரந்தூர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் 70கி.மீ. தூரத்தில் உள்ளது. …

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி