சென்னையில் வெளிநாடுகளுக்கு ரூ.120 கோடி பணபரிமாற்றம் செய்ததாக 4 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

சென்னை: சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ரூ.120 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த அமைப்பை சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு தடை செய்தது. மேலும், தடை செய்யப்பட்ட அமைப்பின் அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகள் விடுகன் என நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை முடிவில், தமிழகத்தில் 12 பேர் உட்பட நாடு முழுவதும் 109 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவணங்களை வைத்து என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்தது போன்று ரூ.120 கோடிக்கு மேல் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த தகவலின் படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நிசார்(37) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர்.அதேபோல், விருகம்பாக்கம் ஆழ்வார்திருநகர் 1வது தெரிவில் ஷபியுல்லா என்பவது வீடு மற்றும் அவரது சகோதரர்கள் இதயதுல்லா, ஷகீல், நியமதுல்லா என்பவர்களது வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்,  வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை இறக்குமதி செய்தது போன்று கணக்கு காட்டி சட்டவிரோதமாக பணத்தை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 4 இடங்களில் நேற்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை