சென்னையில் மெட்ரோ ரயில் அருங்காட்சியகம்: மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை நடைபெற்று வரும் பூவிருந்தவல்லி முதல் சாலிகிராமம் வரையிலான உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ச்சுனன்(திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் அசோக்குமார், ரேகா பிரகாஷ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆய்விற்கு பின்னர் மேலாண்மை இயக்குநர் சித்திக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  பூவிருந்தவல்லி முதல் போரூர் வரை 7.94 கி.மீ தூரம் 4வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சென்று வருவதற்கான பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாதையில் தற்போது 111 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாதையில் 342 ராட்சத தூண்கள் அமைக்கப்பட உள்ளது. பூவிருந்தவல்லி முதல் போரூர் வரையிலான இப்பணிகள் அனைத்து ரூ1,147 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. செனாய் நகர் பூங்காவை மேம்படுத்தி வருகிறோம். செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மெரினாவில் உள்ள காந்தி சிலையை தற்காலிக அடிப்படையில் மட்டுமே அப்புறப்படுத்தியுள்ளோம். மெட்ரோ ரயில் தூண்களில் பூச்செடிகள் வைத்து அழகுபடுத்தப்படும். டெல்லியில் உள்ளது போன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புகைப்படத்துடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திருவெற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தை ஆய்வு செய்து அங்கே நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு