சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதையில் வாகனம் ஓட்டிய 350 பேர் மீது வழக்குப்பதிவு

* பைக் ரேசில் ஈடுபட்ட 100 பேர் கைது* விபத்தில் சிக்கி 41 பேர் படுகாயம்சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டது. மெரினா காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை என முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், புத்தாண்டு விபத்துகளை தடுக்கவும் மாநகரம் முழுவதும் 300 இடங்களில் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், போலீசாரின் தடையை மீறி சென்னையில் பல்வேறு இடங்களில் பைக் ரேஸ் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 350 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மாநகரம் முழுவதும் நடந்த சிறு சிறு விபத்துக்களில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 17 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 பேர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 41 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை ெபற்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர காவல் எல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 2 பேர் இறந்துள்ளனர். போலீசார் சென்னையில் 100 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 100 வழக்குகள் பதிவு செய்து 100 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை