சென்னையில் பட்டாசு வெடித்த 16 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு தீக்காயம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்த 16 குழந்தைகள் உட்பட 51 பேர் தீக்காயமடைந்தனர். இதில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் லேசான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் ஏற்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் உட்பட 15 பேர் லேசான தீக்காயத்துடனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் லேசான தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயத்துடன் உள் நோயாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டு பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் 38 பேர் சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டு பட்டாசு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்….

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு