சென்னையில் தீவிர சோதனை குட்கா விற்ற 18 பேர் கைது

சென்னை: சென்னை முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 18 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்யும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்திய அதிரடி சோதனையில் திருவல்லிக்கேணியில் குட்கா விற்பனை செய்து வந்த ராமநாதபுரத்த சேர்ந்த ஆஷிக் ரகுமான் (25), தமீமுன் அன்சாரி (22), அஜ்மல்கான் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் ஆட்டோவில் குட்கா பொருட்களை கடத்தி வந்த கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் ரோடை சேர்ந்த ஐஸ்டின் திரவியம் (31), அருண்குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சென்னை முழுவதும் குட்கா பதுக்கி விற்பனை மற்றும் கடத்தியதாக மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ குட்கா பொருடகள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை