சென்னையில் தயாரிக்கப்பட்ட 28 மலை ரயில் பெட்டிகள் விரைவில் சோதனை ஓட்டம்: தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல்

மேட்டுப்பாளையம்: சென்னையில் தயாரிக்கப்பட்ட 28 மலை ரயில் பெட்டிகள் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என தென்னக ரயில்வே அதிகாரி அகர்வால் தெரிவித்தார். மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் பாதையில் கடந்த பருவமழையின்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பதிப்புக்குள்ளானது. அதுமட்டுமின்றி கடந்த சில நட்களுக்கு முன்பு ரயில் பாதையில் யானை வழித்தடங்களை மறைத்து 16 இடங்களில் சுவர் அமைக்கப்பட்டது. இதனால் யானைகள் செல்லுவதற்கு பாதைகள் இல்லாமல் அவதிக்குள்ளாகின. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு பின் அந்த சுவர் அகற்றப்பட்டது.இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் பாதையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் அகர்வால் சிறப்பு ரயிலில் சென்று பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்த அவரை ரயில் நிலைய மேலாளர் பிரசன்னா சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 28 புதிய மலை ரயில் பெட்டிகளையும், திருச்சி ரயில்வே பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட நிலக்கரியால் இயங்கக்கூடிய ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்படாமல் உள்ளதையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 28 மலை ரயில் பெட்டிகள் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பயணிகள் ரயிலில் இணைக்கப்படும். நிலக்கரியால் இயங்கக்கூடிய புதிய ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான நிலக்கரி தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. தரமான புதிய நிலக்கரி வந்தவுடன் மலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதுவும் பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சிறப்பு ரயில் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை புறப்பட்டுச் சென்றார்….

Related posts

முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க நடவடிக்கை: கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்