சென்னையில் கொரோனா 2வது அலையில் 4 காவலர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா 2வது அலையில் 4 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். முன்களப்பணியாளர்களாக உள்ள காவலர்களில் நாள்தோறும் 13 முதல் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 4 காவலர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ஆம் தேதி யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கோட்டூர்புரம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமை காவலர் கருணாநிதி நேற்று உயிரிழந்தார். கொடுங்கையூரை சேர்ந்த 55 வயதுடைய தலைமை காவலர் முருகேசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். அதேபோல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த மகாராஜன் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கொரோனாவிற்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையில் 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது கொரோனா 2வது அலையின் தீவிரத்தை காட்டுவதாக காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்….

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்