சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 300க்கும் கீழ் குறைந்தது: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 300க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் சென்னையில் பல இடங்களில் நோயின் தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில்  தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பீமன்பேட்டை பகுதியில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  சென்னையில் கடந்த  2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு 2 வது அலையில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.  அதன்படி  கடந்த மாதம் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகவே  இருந்தது. குறிப்பாக சென்னையில் நோய் பரவல் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. மேலும் கடந்த மாதம் 12ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அப்போது சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 7,500 க்கும் மேல் இருந்தது. அதன்பிறகு ஒரு வாரத்திற்கு  நோய் தாக்கம் சீராகவே  இருந்து வந்தது. பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி வரையில் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.  இந்த எண்ணிக்கை 21ம் தேதியில் இருந்து குறையத் தொடங்கியது. அதன்பிறகு தினசரி பாதிப்பு தமிழகம்  முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதைப்போன்று சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கிய நாள் முதல் முதல்  கடந்த 14 மாதங்களுக்கு மேல்  சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.  இதையடுத்து சென்னையில் கொரோனாபாதிக்கப்பட்டு பகுதிகளில் 10க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதியை மாநகராட்சிஅதிகாரிகள் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பகுதிகளாக அறிவிக்கப்படும். அந்த பகுதிகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு முன்களப்பணியாளர்கள் தினம் உடல்வெப்பநிலை,  ஆக்சிஜன்  அளவு சோதனை செய்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை வாங்கி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பகுதிகள் 1,500க்கும் மேற்ப்பட்ட பகுதிகளில் இருந்த நிலையில் தற்போது 300க்குள் குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இந்த கட்டுப்படுத்தப்பகுதிகளை குறைக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும்  சென்னையில் தினமும்  பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக 2,500க்கும் குறைவானர்களே தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சென்னையில்  தினசரி பாதிப்பு 2,062  ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி பாதிப்பில் கோவை முதல் இடத்துக்கு  சென்றது. …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்