சென்னையில் இருந்து மறுகுடியமர்வு செய்ததால் வாழ்வாதாரம் பறிபோனது: பெரும்பாக்கத்தில் பரிதவிக்கும் குடும்பங்கள்

* 48 சதவீதம் பேர் நிரந்தரமாக வேலை இழந்த பரிதாபம் * ஊரடங்கு காலத்தில் பால், காய்கறி வாங்க கூட பணமில்லைசென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாக்கத்தில் மறு குடியமைர்வு செய்யப்பட்டத்தில் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. குறிப்பாக 48 சதவீதம் பேர் நிரந்தரமாக ேவலை இழந்துள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் பால்,காய்கறி வாங்க கூட பணமில்லாமல் தவித்துள்ளனர். சென்னை அடையாறு, கூவம் நதி மற்றும் கால்வாய் களை தமிழக அரசு சீரமைத்து வருகிறது. இதைத்தவிர்த்து நகரின் மையப்பகுதியில் குடிசைகளில் உள்ளவர்களை மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு நகரின் உள்ளே வீடுகளை ஒதுக்கீடு செய்யாமல் புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் குடி அமர்த்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையும் மீறி பொதுமக்கள் அகற்றப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் பல பகுதியில் இருந்து பெரும்பாக்கத்திற்கு மறு குடியமர்வு செய்யப்பட்டவர்களில் பலர் வாழ்வாதாரம் இழந்து உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக 48 சதவீதத்தினர் நிரந்தரமாக வேலை இழந்துள்ளது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நகர்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் வீடு மற்றும் நில உரிமைக்கான அமைப்பு இணைந்து பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது: 2017ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை 9055 குடும்பங்களைச் சேர்ந்த 36,220 பேர் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 15 சதவீதம், அதாவது 1314 குடும்பங்கள் ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவற்றில் 193 குடும்பங்கள் 2017ம் ஆண்டும். 729 குடும்பங்கள் 2018ம் ஆண்டும், 337 குடும்பங்கள் 2019ம் ஆண்டும், 55 குடும்பங்கள் 2020ம் ஆண்டும் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்கள். இதன்படி 1,095 பேர் பெண்கள் மற்றும் 219 பேர் ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது அதிக வீடுகளில் பெண்கள் இருந்த காரணத்தால் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மறு குடியமர்வு செய்யப்பட்ட பிறகு 48 சதவீதத்தினர் நிரந்தரமாக வேலை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது வரை எந்த வித வேலையும் கிடைக்காமல் உள்ளனர். 46 சதவீதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு பாதிப்பு தொடர்பாக 599 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 379 பேர் மூன்று மாதம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 209 பேர் 6 மாதம் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இவர்கள் அனைவரும் அரசின் ரேசன் பொருட்களை நம்பிதான் இருந்துள்ளனர். பால், காய்கறி கூட வாங்க பணமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு மதிய உணவு, முட்டை கூட கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாக்கத்தில் தொடர்ந்து புதிய குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும்  குறிப்பாக பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.என்ன செய்ய வேண்டும்?* ஆய்வில் கலந்து கொண்டவர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 92 சதவீதம்* 8 பேருக்கு மட்டுமே குடிசை மாற்று வாரியம் மூலம் வேலை கிடைத்துள்ளது.* 55 மாற்றுத்திறனாளிகளில் 22 பேர் வேலை இழந்துள்ளனர்* வாழ்வாதார பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தவேண்டும், சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி பணிவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னனுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். * உடனடியாக மார்க்கெட் அமைக்க வேண்டும்…

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை