சென்னையில் இருந்து தஞ்சை வரவழைத்து வாய்க்காலில் அமுக்கி வாலிபர் கொலை: அக்காவுடன் தொடர்பு வைத்ததால் தம்பி ஆத்திரம்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து விஏஓ செல்வராஜ் அளித்த புகாரின்பேரில்  தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்காவில் நின்ற பைக்கை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அதில், அந்த பைக் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா திண்ணியம் மெயின்ரோடு கீழஅன்பிலை சேர்ந்த பழனிராஜ் மகன் பாஸ்கரன்(25) என்பவருக்கும் சொந்தமானது என்பதும், இறந்து கிடந்தவர் அவர் தான் என்பதும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார். பாஸ்கரன் செல்போனை சோதனை செய்ததில் அவருடன் கடைசியாக பேசியது திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் வடக்கு கள்ளர் தெருவை சேர்ந்த ஆகாஷ்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அவர் தான் பாஸ்கரனை  கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆகாஷ் மீது கொலை வழக்கு பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.ஆகாஷ் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:சென்னையில் பாஸ்கரன் டிஜிட்டல் போர்டு வேலை பார்த்து வந்துள்ளார். அவரது பாட்டி ரெங்கம்மாள் வீடு, ஆகாஷ் வீட்டுக்கு அருகில் இருந்தது. அடிக்கடி அங்கு வந்த பாஸ்கரன், ஆகாஷ் அக்காவுடன்(பெரியம்மா மகள்) பழகி வந்துள்ளார். இதனால் ஆகாஷின் அக்கா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பாஸ்கரனை தீர்த்துக்கட்ட ஆகாஷ் முடிவு செய்தார். இதைதொடர்ந்து பாஸ்கரனை செல்போன் ரிப்பேர் செய்ய வேண்டுமென சென்னையில் இருந்து தோகூர் வரவழைத்து இருவரும் மது அருந்தினர். பின்னர் அரசங்குடி அங்காள பரமேஷ்வரி கோயில் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் நீரில் பாஸ்கரனை அமுக்கி ஆகாஷ் கொலை செய்ததாக வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாசை திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்….

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை