சென்னையில் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவ.15க்குள் செலுத்தி 2% தனிவட்டியை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவ.15க்குள் செலுத்தி 2% தனிவட்டியை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5% அல்லது  அதிகப்பட்சமாக ரூ. 5000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் 01.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 01.10.2022 முதல் 18.10.2022 தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியினை செலுத்தியுள்ளனர். மேலும், இரண்டாம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக (01.10.2022 முதல் 15.10.2022 வரை), சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ. 4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி-29Dன்படி, தாமதமாக  சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும், எனினும், சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த 15.11.2022 வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை  சொத்து உரிமையாளர்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையின் மூலம் செலுத்தலாம்.* வருவாய் அலுவலர்,  சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும்  வரைவோலைகள், கடன்/பற்று அட்டை மூலமாக,  பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை (Receipt)  பெற்றுக் கொள்ளலாம்.  * பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி  ரசீதுகளில் உள்ள QR Code பயன்படுத்தியும்,* பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in ) மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் (Nil Transaction fee), * தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம்  நேரடியாக பணமாகவும், * ‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்.’ முதலிய கைபேசி செயலி மூலமாகவும்,* BBPS (Bharat Bill Payment System) மூலமாகவும்,* மண்டல/வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களிலும் சொத்துவரியினை செலுத்தலாம்.எனவே, சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் 15.11.2022க்குள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வழிமுறைகளில் செலுத்தி 2 சதவீத தனிவட்டியினை தவிர்க்குமாறு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெரிவித்துள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை