சென்னையில் இன்று 500 புறநகர் மின் ரயில்கள் இயக்கம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் இன்று 500 புறநகர் மின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் – அரக்கோணம் இடையே தேங்கிய மழைநீர் அகற்றியதால் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆவடி – அம்பத்தூர் இடையே தேங்கி மழைநீர் அகற்றப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் மின் ரயில் சேவை சீரானது. சென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு மேம்பால ரயில் சேவை, புறநகர் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து சீரானது. கொருக்குப்பேட்டை – திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி இடையே மழைநீர் அகற்றப்பட்டு, ரயில் சேவை நடைபெறுகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு ரயில் பாதை சீரானதால் ஞாயிற்றுக்கிழமை போல தற்போது 500 மின் ரயில்கள் இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களை மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் மழைநீர் தேக்கம் மற்றும் உடைப்பு குறித்து டிராலியில் சென்று கண்காணிக்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ரயில் பாதையில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றவும் ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கையாக பாதிப்புள்ள பகுதிகளில் 10 முதல் 30 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், இன்று (11.11.2021 வியாழன்) புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்