சென்னையில் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ20156 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

சென்னை: நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது: * மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிப்பதற்காக தலா ரூ.6  கோடி வரவு,செலவு திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி அச்சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை இந்த அரசு பாதுகாக்கும். தகுதியுள்ள நபர்கள் நேர்மையான சேவைகளை பெறும் வகையில் 2009ல் அமைக்கப்பட்ட உலாமாயமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நலவாரியத்திற்காக புத்துயிர் அளிக்கப்படும்.* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், குறைந்தபட்சம் 7 ஆயிரம் பேரில் ரூ.50 கோடி ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டுக்  கடனுதவியை பெறுவதற்கு உதவி செய்யும்.* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ரூ.20156 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும். * சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் மொத்தம் ரூ.2371 கோடி செலவில் தீவிமாக செயல்படுத்தப்படும். ஆந்திர பிரதேசத்தில் இருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.* அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க கூடிய ரூ.2300 கி.மீ சாலைகளை 4 வழிச்சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் வகையில் 6700 கி.மீ ஒற்றை மற்றும் இடைநிலை வழிச்சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே இந்த அரசின் நோக்கம்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு