சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,728க்கு விற்பனை: நகை பிரியர்கள் குஷி..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த 2 தினங்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில், தங்கம் விலை சவரனுக்குரூ.448 உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,728 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 66.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 66,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்….

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது