சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்

சங்கரன்கோவில், ஆக.29: தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. சங்கரன்கோவில் ரயில்வே பீடரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் டிகே பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம், சங்கரன்கோவில் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட கூட்டமைப்பு பொருளாளர் சிவ ஆனந்த் வரவேற்றார். கூட்ட நிகழ்ச்சிகளை தென்காசி மாவட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி பாண்டியன், மாவட்ட ஆலோசகர் சந்திரசேகர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

கூட்டத்தில் வரும் ஆக. 31ம் தேதி மாநில அளவில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கருப்பு சட்டை அணிந்து சென்னையில் நடைபெறும் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சி மன்ற தலைவர்களில் 138 பேர் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆலங்குளம் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் நீதி ராஜன், துணைத் தலைவர் வீரபாண்டியன், செங்கோட்டை ஒன்றிய கூட்டமைப்பு நிர்வாகி முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, கீழப்பாவூர் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கூட்டமைப்பு துணைத்தலைவர் அன்புராணி நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை