சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது

சென்னை: சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிடோரை போலீசார் கைது செய்தனர். தமிழக பாஜ மகளிர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவர் உமாரதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜ மகளிர் அணியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி பொது செயலாளர் கேசவ விநாயகம், துணை தலைவர் கருநாகராஜன், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாஜவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அரசு பஸ்சில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை