சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 10,663 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11,057 மில்லியன் கன அடியில், 10,663 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை நிலவரப்படி 3,135 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2,997 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 2,997 கன அடி நீர் லிங்க் கால்வாய் வழியாக மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது 3,396 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,330 மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை 3,251 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 368 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. இதில், நேற்று காலை 881 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதில், வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது…

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்