செந்துறை முதல் பொன்பரப்பி வரை நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி: விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஆய்வு

 

அரியலூர், செப். 21: அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை விழுப்புரம் கோட்டப்பொறியாளர் தரக்கட்டுபாடு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆய்வின் போது, செந்துறை உதவிக்கோட்டப் பொறியாளர், மற்றும் அரியலூர் தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப்பொறியாளர், உதவிப்பொறியாளர் உடன் இருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி