செட்டிநாடு கதம்பச் சட்னி

பக்குவம்:வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின்பு இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி ஆகியவற்றுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும். வதங்கியபின்பு புளி மற்றும் தேங்காயினைச் சேர்த்து ஒருமுறை வதக்கி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். வேண்டிய அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஆறியதை உரலில் ஆட்டி எடுத்தாலும் சரி, மிக்சியில் அரைத்து எடுத்தாலும் சரிதான். அரைத்த சட்னியில், கடுகு தாளித்து ஊற்றினால் மணக்க மணக்க, சுவையான செட்டி நாட்டு கதம்பச் சட்னி தயார். வெள்ளைப் பணியாரத்துக்கு இதுதான் சரியான ஜோடி….

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி