செட்டிகுளம் அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா

 

பாடாலூர், செப்.30: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும், பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியருமான ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார். தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி விளையாட்டு மைதானத்தில் களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் தனபால், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராஜாசிதம்பரம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

ஜூலை 5ம் தேதி கடைசி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு