செங்கையில் கழிவுநீர் தொட்டியில் கிடந்தவர் உடல் அடையாளம் தெரிந்தது ‘ஒருமையில் பேசியதால் தீர்த்து கட்டினோம்’

* கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, பக்தர்களின் பயன்பாட்டிற்காக கார் பார்க்கிங் இடத்தில் பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டி உள்ளது. இதிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியதால் மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து ஆண் சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர். தலையில் வெட்டு காயங்களுடன் உடல் அழுகி அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டாரா அல்லது கால் தவறி தொட்டியில் விழுந்து இறந்தாரா? என பல கோணங்களில் தீவிர விசாரித்தனர். இதில், சடலமாக கிடந்தவர், செங்கல்பட்டு பட்டரைவாக்கம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ராஜா (37) என்பது தெரிந்தது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஒட்ட கார்த்திக் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். அவர் உள்ளிட்ட 4 பேர்தான் ராஜாவை தீர்த்து கட்டியது தெரிந்தது. ஒட்ட கார்த்திக் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ராஜா உள்ளிட்ட எனது கூட்டாளிகளான சிங்கபெருமாள் கோயில் மண்டப தெருவை சேர்ந்த மணி (22), எம்ஜிஆர் தெரு ஜெஜெ.நகர் சரவணன் (27), ராஜிவ்காந்தி தெரு சங்கர் (25), குளத்தங்கரை தெரு விக்னேஷ் (21) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது, எனக்கும் ராஜாவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களை ஒருமையில் பேசினார் ராஜா. இதனால் எனக்கு கோபம் வந்தது. தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர். ஆத்திரம் தீராத நாங்கள், ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். அதன்படி, பைக்கில் துரத்தினோம். நரசிம்ம பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த ராஜாவை கொலை செய்து விட்டு உடலை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் வீசி விட்டு தலைமறைவாகி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, ஒட்டகார்த்திக் உள்பட 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிaறையில் அடைத்தனர்….

Related posts

விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி

ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ்

ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது