செங்குன்றம் அருகே ஸ்ரீஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 

புழல்: செங்குன்றம் அருகே ஸ்ரீ ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் மேட்டு தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் உற்சவருக்கு கடந்த மூன்று நாட்களாக வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சீர்வரிசையுடன் கும்பம் மரியாதை மேளதாள, வான வேடிக்கையுடன் திருவீதி உலா சென்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, வழி நெடுகிலும் கலச வழிபாடு செய்து, தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை புழல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜி.கே.கணேஷ் கோதண்டன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.கே.இனியன் குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் புழல் ஒன்றிய திமுக செயலாளர் பி.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன், சாந்தி கணேஷ் கோதண்டன், துளசி ராமானுஜம் வேதநாயகி, இனியன் திவ்யா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது, 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்