செங்காந்தள் தமிழாய்வு மன்றம் தமிழ்க் கூடல் விழா

மோகனூர், ஜன.24: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், செயல்படும் செங்காந்தள் தமிழாய்வு மன்றம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், தமிழ்க் கூடல் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுடரொளி தலைமை வகித்தார். எருமைப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் செந்தில் குமார் கலந்து கொண்டு, \”சிந்திக்கப் பழகு\” என்னும் தலைப்பில் பேசினார். கவிஞர் வெற்றிச்செல்வன் \”உன்னால் முடியும்\” என்னும் தலைப்பில் பேசினார். தமிழ்க் கூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி துர்கா வரவேற்றார். மாணவி மணிஷா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் பார்வதி, தனலட்சுமி வீரராகவன், பாண்டியராஜன், தீபா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை