செங்கல் சூளையில் சிக்கிய கட்டுவிரியன்

சின்னாளபட்டி : அம்பாத்துறை அருகே செங்கல் சூளையில் கொடிய விஷமுள்ள இரு கட்டுவிரியன் பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். திண்டுக்கல் – மதுரை சாலையில் அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் எதிரே செங்கல் சூளை உள்ளது. செங்கல் அறுக்க வந்த தொழிலாளர்கள் அங்கு இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் இருப்பதைக் கண்டு அலறியடித்து ஓடினர். தகவல் பேரில் வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த இரண்டு கட்டுவிரியன் பாம்புகளை பிடித்தனர். ஒவ்வொரு பாம்பும் 7 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட பாம்புகளை தீயணைப்புத் துறையினர் ஆத்தூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள வனத்தில் விட்டனர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!