செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பழுதடைந்த எஸ்கலேட்டர் சீரமைப்பு

செங்கல்பட்டு, ஆக. 6: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், பழுதான எஸ்கலேட்டர் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க ஊழயர்களுக்கு உத்தரவிட்டனர்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த எஸ்கலேட்டர் பழுதாகி பல மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாமல் இருந்தது. இதனால் ரயில் பயணிகள் வெகுதூரம் செல்லும் ரயில்களை பிடிப்பதற்கு நீண்ட தூரம் படிக்கட்டில் ஏறி பயணம் செய்யும் நிலை இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று ரயில்வே அதிகாரிகள் பழுதான எஸ்கலேட்டரை ரயில்வே பொறியாளர் குழுவினர் உதவியுடன் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால், சிரமமின்றி முதியோர்கள், சிறுவர்கள், பெண்கள் எக்ஸ்லேட்டரில் சென்றனர். நீண்ட நாள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுத்ததற்கு பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து