செங்கல்பட்டு மாவட்ட விற்பனையாளர்கள் கூட்டம் விதைகள் தரமானதாக இருக்கவேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்ட விதை விற்பனையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் ராகுல்நாத், விதைகள் தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் வேளாண்மை துறை விதை சான்று மற்றும் அங்க சான்றளிப்பு துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு ‘ஸ்பெக்ஸ்’ எனப்படும் இணைய தள பயிற்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது.மாவட்டத்தில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும். விவசாயிகளின் முக்கிய ஆதாரம் விதை என்பதால், அதனை தரமானதாக வினியோகிக்கவும், விதைகள் போதுமான அளவு இருப்பு வைத்து தட்டுப்பாடின்றி சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் வினியோகிக்க வேண்டும். இதனை விற்பனையாளர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார். முன்னதாக, வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த வேளாண் சம்பந்தப்பட்ட கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர், திருக்கழுக்குன்றத்தில் ரூ.2.2 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்களை பார்வையிட்டு, அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அதேபோன்று, விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு விவசாய இடு பொருட்களை வழங்கினார்.  இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், வேளாண் துணை இயக்குனர் ஏழுமலை, விதை சான்று துணை இயக்குனர் கலாதேவி, திருக்கழுக்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் சரவணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை