செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்தில் 15.73 லட்சம் பெண்கள் பயணம்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் இதுவரையில் 15,73,363 பெண்கள், 1,794 திருநங்கைகள், 12,883 மாற்றுத்திறனாளிகள், அவர்களுடன் வருபவர்கள் 2,606 என மொத்தம் 15,90,646 பேர் பயனடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு மக்களிடமும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பு அடைந்துள்ளது.

பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்யும் பெண்கள், இலவச பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் தாய்மார்கள், குழந்தைகளை நாள்தோறும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் பெண்கள், வயதான முதியவர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பு பெண்களிடமும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என கலெக்டர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெண் பயணி ஒருவர் கூறுகையில், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு இத்திட்டம் தினமும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதந்தோறும் பேருந்து செலவில் ரூ.1000க்கும் மேல் எனக்கு மிச்சமாகிறது. இந்த திட்டம் எனக்கும் என்னை போன்று பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்