செங்கமலநாச்சியார்புரத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

விருதுநகர், பிப்.20: செங்கமலநாச்சியார்புரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோஸ் காலனி அருந்ததியர் தெரு, இந்திரா காலனி பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், பெண்களுக்கான கழிப்பறை பல வருடங்களாக பழுதடைந்து மண் விழுந்து வருகிறது. சின்டெக்ஸ் டேங்க் பழுதாகி சரி செய்யப்படாமல் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமிண்ட் சாலைகள் சேதமடைந்து கற்சாலையாக காட்சி தருகிறது. மயான மேடை இடிந்து விழுந்துள்ளது. ஆண்களுக்கான கழிப்பறை மற்றும் தொட்டி பராமரிப்பு ஒருவருடமாக செய்யாததால் தொட்டி உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், அருந்ததியர் தெரு குடியிருப்புகளில் மட்டும் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.

சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. ஊராட்சி அலுவலத்தில் மனு பல முறை அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அருந்ததியர் தெருக்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

மீஞ்சூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை

பெருவாயில் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாமரைக்குப்பம் கால்வாய் மதகு சீரமைக்கும் பணி தொடக்கம்