சூலூரில் காங். மாணவர் அமைப்பு கலந்தாய்வு கூட்டம் வரும் தேர்தல் பாஜவுக்கும், மக்களுக்கும் இடையேயான தேர்தல்

 

சூலூர், ஜூலை 24: கோவை, கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்துகொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்கு உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரையானது ஒரு பேக்கான யாத்திரை. அதனால் எந்த பயனும் இருக்காது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.

கர்நாடகத்தை போன்று தமிழ்நாட்டு அரசியலிலும் சிலிண்டரை வைத்து அரசியல் செய்ய உள்ளோம். சிலிண்டர் என்பது பாஜ அரசுக்கு எதிரான சின்னம். 2024-ம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது பாஜவுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான தேர்தல் இல்லை. இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பாஜவை எதிர்ப்பதற்கான தேர்தல். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு