சூறைக்காற்று… வாட்டிவதைக்கும் கடுங்குளிர்!: அமெரிக்காவை மிரட்டும் பாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

அமெரிக்கா: அமெரிக்காவை மிரட்டும் பாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வேகமாக உருவெடுத்த புயல் மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை தாக்கியுள்ளது. பாம்போஜெனனீ சிஸ் என்றழைக்கப்படும் இவ்வகையான புயலால் பெரும்பாலான மாகாணங்களில் கடும்பனி சூறைகாற்று வீசுகிறது. தலைமுறை காணாத கடும்குளிர் அமெரிக்காவையே புரட்டிபோட்டுள்ளது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். தெற்கு டகோட்டாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குளிர்மிக மோசமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியேய் செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்தநாட்டு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. பாம் புயல் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர்.ஜோபைடன் நீங்கள் குழந்தையாக இருந்த போது பனி பெய்கிறது என்றால் உற்சாகம் அடைவீர்கள் ஆனால் தற்போது அது போல் இல்லை என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வாடகிழக்கு மாகாணங்களில்  கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பாம் புயலால் நியூ ஹாம்சயர் கடற்கரையில் ராட்சத அலைகள் கரைகளை தாக்குகிறது. இதனால் கடற்கரை நகரங்களில் கடல் நீர் புகுந்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, ஆல்பமா மற்றும் புளோரிடா மாகாணங்கள் ஆர்ட்டிக் சூறாவளி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. கடும் குளிர், பனிப்பொழிவு ,கடற்கரை நகரங்களில் வெல்லம் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 60 சதவிகித மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பாம் புயலால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு ஏற்பட்டால் மக்கள் அறிவுறுத்தல் கையேட்டில் உள்ள ஜெனரேட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும். வீட்டுக்குள் ஜெனரேட்டரை இயக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்….

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்