Saturday, July 6, 2024
Home » சூரியகுமார் அதிரடி அரை சதம் இந்தியா 184 ரன் குவிப்பு

சூரியகுமார் அதிரடி அரை சதம் இந்தியா 184 ரன் குவிப்பு

by kannappan

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், சூரியகுமார் யாதவின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இரு அணியிலும் தலா 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ருதுராஜ் 4 ரன் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் மேயர்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து இஷானுடன் ஷ்ரேயாஸ் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 25 ரன், இஷான் 34 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோகித் 7 ரன் எடுத்து டிரேக்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 13.5 ஓவரில் 93 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சூரியகுமார் – வெங்கடேஷ் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினர்.இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சூரியகுமார் 27 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதமடித்தார். ஷெப்பர்ட் வீசிய கடைசி ஓவரில் 3 இமாலய சிக்சர்களை தூக்கிய அவர் 65 ரன் (31 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் பாவெல் வசம் பிடிபட்டார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. வெங்கடேஷ் 35 ரன்னுடன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர், ஷெப்பர்ட், சேஸ், ஹேடன் வால்ஷ், டிரேக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது….

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi