சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக வாங்கிய 75 ஆயிரத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கும் போலீஸ் எஸ்ஐ எஸ்பி அலுவலகத்தில் விவசாயி புகார்

 

திருவண்ணாமலை: சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி 75 ஆயிரம் வாங்கிக் கொண்டு 2 ஆண்டுகளாக திருப்பித் தரவில்லை என எஸ்ஐ மீது விவசாயி புகார் அளித்தார். திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் ஏழுமலை என்பவர் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவில் எஸ்ஐ ஆக பணிபுரிபவர், சூப்பர் மார்க்கெட் தொடங்குவதாக கூறினார்.

அதில் பங்குதாரர்களாக சேர ₹25 ஆயிரம் கொடுத்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்த பணத்தையும் அதன் மூலம் கிடைத்த லாபத்தையும் பிரித்து தருவதாக தெரிவித்தார்.அதை நம்பி நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ₹75 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு