சூப்பர் ஜோடி!

* ரோகித் – கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது, இந்தியாவுக்கு வெளியே கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த சிறப்பான தொடக்கமாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 20 ஓவருக்கு மேல் தாக்குப்பிடித்த முதல் ஜோடியும் இதுதான். மேலும், கடந்த 7 டெஸ்ட்களில் ஒரு இன்னிங்சில் கூட எந்த தொடக்க இணையும் 50 ரன்னை கடந்ததில்லை என்ற சோக வரலாற்றையும் இவர்கள் மாற்றி எழுதியுள்ளனர்.* ஆஸி.க்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர் அடித்த வீரர் என்ற புதிய இலக்கை ரோகித் எட்டியுள்ளார்.* ஆஸி. முதல் இன்னிங்சில் 80வது ஓவருக்கு பிறகு வீசப்பட்ட 26 ஓவர்களில் அஷ்வினுக்கு ஒரு ஓவர் கூட தரப்படவில்லை.* இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்மித்தும் இணைந்துள்ளார். ஸ்மித் (25 இன்னிங்ஸ்), பான்டிங் (51 இன்னிங்ஸ்), சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்), ரிச்சர்ட்ஸ் (41இன்னிங்ஸ்) ஆகியோர் தலா 8 சதங்களை விளாசியுள்ளனர்.* ஜடேஜா சாதனைஜடேஜா 62 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது, வெளிநாட்டில் அவரது 3வது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2013/14ல் 138 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததும், இலங்கைக்கு எதிராக 2017ல் 152 ரன்னுக்கு 5விக்கெட் எடுத்ததும் முதல் 2 இடங்களில் உள்ளன.* தில்லான கில்! ஆசிய நாடுகளுக்கு வெளியே இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில் (21 வயது, 122 நாள்)  4வது இடத்தை பிடித்துள்ளார். 1982ல் இங்கிலாந்துக்கு எதிராக ரவி சாஸ்திரி (20 வயது, 44 நாள்), 1952ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4 அரை சதம் விளாசிய மாதவ் ஆப்தே (20 வயது, 108 நாள்), 2020ல் நியூசி.க்கு எதிராக பிரித்வி ஷா (20 வயது, 112 நாள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.* இதுவரை நான் செய்த ரன் அவுட்களிலேயே இது தான் பெஸ்ட். ஸ்மித்தை ரன் அவுட் செய்த வீடியோவை மறுபடி மறுபடி பார்ப்பேன்’ என்று ஜடேஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.* பிரிஸ்பேன் நகரில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் அங்கு 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்று ஸ்மித் கூறியுள்ளார். பிரிஸ்பேனின் கெடுபிடிகள் அதிகம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அணி, அங்கு சென்று விளையாட தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.* சிலியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய மகளிர் ஜூனியர் ஹாக்கி அணி, அந்நாட்டின் ஜூனியர் அணியுடன் 2 ஆட்டங்களிலும் (ஜன. 17, 18), சீனியர் அணியுடன் 4 ஆட்டங்களிலும் (ஜன. 20, 21, 23, 24) விளையாட உள்ளது.* கிரிக்கெட்டின் 4வது பரிமாணமாக உருவெடுத்துள்ள டி10 போட்டியை ஒலிம்பிக்சில் சேர்க்கலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல் கூறியுள்ளார்.* போட்டிகளில் பங்கேற்பதற்காக ரயில்களில் பயணிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார். * ஜப்பானில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியை நடத்துவது இயலாத காரியம் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.* மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய இந்தோனேசிய வீரர்கள் 3 பேருக்கு உலக பேட்மின்டன் கூட்டமைப்பு ஆயுள் தடை விதித்துள்ளது….

Related posts

சில்லி பாய்ன்ட்…

கோபா கோப்பை கால்பந்து:10 வீரர்களுடன் விளையாடி பைனலுக்கு முன்னேறிய கொலம்பியா

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர்