Monday, September 23, 2024
Home » சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி

சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி

by kannappan

புனே: எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கில், சாஹா களமிறங்கினர். சாஹா 5 ரன் எடுத்து மோஷின் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து வந்த வேட் 10 ரன், ஹர்திக் 11 ரன் எடுத்து ஆவேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். குஜராத் 9.1 ஓவரில் 51 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கில் – மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. மில்லர் 26 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹோல்டர் பந்துவீச்சில் பதோனி வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் கில் – திவாதியா இணைந்து ஸ்கோரை உயர்த்தினர்.குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. கில் 63 ரன் (49 பந்து, 7 பவுண்டரி), திவாதியா 22 ரன்னுடன் (16 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 13.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 82 ரன் எடுத்து, 62 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஹூடா 27 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, ) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13.5 ஓவரில் 82 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது.  குஜராத் பந்துவீச்சில் ரஷித்கான் 24 ரன் கொடுத்து 4 விக்கெட் விழுத்தினார்….

You may also like

Leave a Comment

20 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi