சூதாடிய 4 பேர் கைது

ஊத்தங்கரை, மே 4: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார், பெருமாள் மலையடிவார பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(35), சங்கர்(52), வெங்கட்ராமன், தங்கவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை