சூதாடிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 14: ராயக்கோட்டை காவல்நிலைய பயிற்சி எஸ்ஐ சரசு மற்றும் போலீசார், பழையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புளியந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்(32), முனிராஜ்(28), முரளி(29) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்