சுவாமிமலை முனியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம், ஜூலை 7: கும்பகோணம் அருகே சுவாமிமலை அபிநயா நகர் முனியாண்டவர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சுவாமிமலை காவிரி ஆற்றில் இருந்து செண்டை மேளம் முழங்க, யானை மேல் புனித தீர்த்தம் எடுத்து முன்செல்ல, முளைப்பாலிகை மற்றும் அருள் வேல் நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஆலயம் வந்தனர். தொடர்ந்து ஆலயத்தில் யானைக்கு பட்டாடை உடுத்தி, வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பல வகையான பழங்கள் உணவாக அளித்து, பல வண்ண மலர்கள் தூவி மகா தீபாராதனை காண்பித்து சிறப்பு கஜ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அங்குரார்பனம், கும்ப அலங்காரம், யாக பூஜைகள், விசேஷ திரவிய ஹோமங்களுடன் முதற்கால யாக பூஜை தொடங்கி, மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related posts

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஒட்டுநர் உரிமம் மட்டும் வழங்கப்படும்

ஸ்கூட்டி மீது கார்மோதல் ஒருவர் பலி

தஞ்சாவூரில் இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்