சுவாமிமலை கோயில் சொத்துக்கள் அளவீடு பணி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலின் சொத்துக்களை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பின்படி அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடமாக கோயிலின் இருப்பிடம் சேர்த்து சுமார் 460 ஏக்கர் உள்ளது. தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பின்படி தமிழகத்தில் கோயில் சொத்துக்களை சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் சொத்துக்களை அளவீடு செய்யும் விதமாக மயிலாடுதுறை மண்டலத்தில் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டதில் ஐந்து பேர் அடங்கிய தனியார் ஏஜென்சிஸ் கொண்ட ஒரு குழு கும்பகோணம் சுவாமிமலையில் டிஜிபிஎஸ் என்ற நவீன கருவியை கொண்டு விளை நிலமாகவும், கட்டிடங்களாகவும் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களையும் அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.இந்த அளவீட்டு கருவி குறிப்பிட்ட நிலத்தில் வைத்து பயன்படுத்தும்போது நிலத்தின் சரியான நெட்டாங்கு குறிகை மற்றும் அகலக்கோடு ஆகியவற்றை துல்லியமாக அளவிடும் என்று கூறப்படுகிறது….

Related posts

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

பொங்கல் பண்டிகை- செப். 12 முதல் டிக்கெட் முன்பதிவு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி