சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.83 லட்சம் நலத்திட்ட உதவி

திருவாரூர், ஆக. 5:திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் சாரு பேசியதாவது, தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் கிராமப்புற மகளிரை ஊக்குவிக்கும் விதமாக சுய உதவிகுழுவிலுள்ள பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி பயன்பெற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, திருவாரூர் மாவட்ட வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 174 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஜுன் மாதம் தமிழக முதல்வர் சிறப்பு கடன் உதவியாக நுண் நிறுவனகடன் நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 21 மகளிர் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு கடனுதவியும், திருவாரூர் விடியல் ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பிணை வைப்பு மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில் செயல் அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை