சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சவாரி

இடைப்பாடி, மே 20: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக தற்போது 2100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நெரிஞ்சிப்பேட்டை கதவணை பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால், கடல் போல் இருந்த பகுதிகள், தற்போது குட்டையாக மாறியுள்ளது. இப்பகுதியில் சேலம் நாமக்கல் மாவட்டங்கள் இடையே விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பெரிய விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு, சிறிய விசைப்படகுகள் மட்டும் தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் சென்று வருகிறது.

விடுமுறை தினமான நேற்று வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் விசைப்படகில் குடும்பம், குடும்பமாக சென்று மகிழ்ந்தனர். மேலும், இங்குள்ள மூலப்பாதை பெருமாள் கோயில், மாட்டுக்கார பெருமாள் கோயில், காவிரி கரையில் உள்ள கைலாசநாதர் கோயில் பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து