சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய பைன்பாரஸ்ட்

 

ஊட்டி: ஊட்டி – கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரள, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அதற்கேற்ப ஊட்டியில் மழை பெய்து குளு குளு காலநிலை நிலவி வருகிறது. அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் பைக்காரா செல்லும் வழியில் அமைந்துள்ள பைன்பார ஸ்ட் பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி களைகட்டியுள்ளது. மேலும் காமராஜர் சாகர் அணையை ஒட்டி குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

Related posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3 நாளில் 130 கிலோ தங்கம் பிரித்தெடுப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் விறுவிறுப்பு

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் 8 மாதங்களில் 851 மனுக்கள் மீது தீர்வு