சுற்றுலா பயணிகள் கண்ணெதிரில் மானை வேட்டையாடிய புலி: முதுமலை காப்பகத்தில் பரபரப்பு

கூடலூர்: முதுமலை காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் கண்ணெதிரில் மானை வேட்டையாடிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் காணவேண்டும் என்பதற்காக வனத்துறை சார்பில் தினமும் வாகன சவாரி, யானை சவாரி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு சரகம் வனப்பகுதிக்குள் வாகன சவாரி சென்ற சில சுற்றுலா பயணிகள் புலி ஒன்றை பார்த்தனர். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியை விட்டு வாகன சவாரி செல்லும் சாலையின் ஓரத்திற்கு வந்த அந்த புலியை சுற்றுலா பயணிகள் அமைதியாக புகைப்படம் எடுத்தனர். அப்போது, புலி, பதுங்கியபடி சாலையை கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கி பாய்ந்தது. பின்னர், மானை வேட்டையாடி கொன்ற காட்சியை சுற்றுலா பயணிகள் படம் பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று மானை வேட்டையாடியதை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்….

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்