சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜார்ஜியாவில் பள்ளத்தாக்கின் மேல் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலம்..!!

ஜார்ஜியாவில் பள்ளத்தாக்கின் மேல் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தசல்கா பகுதியில் தாஷிபாக்ஷி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அங்கு இஸ்ரேல் நாட்டின் நிதி உதவியுடன் 240 மீட்டர் நீள கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டனர். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள கிங் பென்குயின்..!!

மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

சியர்ஸ்… 200 ஆண்டுக்கால பழமையான ஜெர்மனி பீர் திருவிழா!