சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், ஜூன் 6: உலக சுற்றுச்சுழல் தினத்தையொட்டி நேற்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணியில் கூத்தாநல்லூர் பெண்கள் கல்லூரி, நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி, திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புதிய ரயில் நிலையத்திலிருந்து துவக்கி இப்பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று புலிவலம் வாளவாய்க்கால் பகுதியில் முடிவுற்றது.முன்னதாக உலக சுற்றுச்சுழல் தின உறுதிமொழியை கலெக்டர் சாரு தலைமையில் பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரெங்கராஜ், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி மேலாளர் மோகன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், வாசுதேவன், சண்முகசுந்தரம், நடனம், பசுமை தோழர் பேகன் ஜமீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை