சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெரியகுளம், ஆக. 30: பெரியகுளத்தில் ‘இணைந்து கரம் கோர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்’ என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியினை, ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை அறிவியல் பெண்கள் கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியானது தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நிறைவடைந்தது. மேலும் மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் துணைச் செயலர் அருள்தந்தை இராஜன் வரவேற்புரை வழங்கினார்.

பெரியகுளம் பங்குதந்தை பீட்டர் சகாயராஜ், தலைமைச் சகோதரி அருட்சகோதரி முனைவர் குயின்ஸ்ஸி ஜெயந்தி, தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி ஆகியோர் பங்கேற்று சிறப்பு சேர்த்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரீன் போஸ் கருத்துரை வழங்கினார். மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் ராஜா நன்றியுரை வழங்கினார். பேரணியின் நிறைவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில், மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்க துணை செயலர்கள் அருள்தந்தை இராஜன் மற்றும் அருள்தந்தை ஸ்டாலின், கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் ராஜா, கோல்பிங் திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்