சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

உடுமலை : தென்னை  மரங்களை தாக்கும் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும்  ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து மானுப்பட்டி கிராமத்தில் செயல்விளக்க  முகாம் நடந்தது.கிராம தங்கல் திட்டத்தின்கீழ், உடுமலையில் பயின்றுவரும்  கோவை வேளாண் பல்கலைக்கழக இளநிலை மாணவிகள் மானுப்பட்டி விவசாயிகளிடம்  கூறியதாவது:பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை பயன்படுத்தினால்,  நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, ஒருங்கிணைந்த  மேலாண்மை முறையை கொண்டு இவற்றை கட்டுப்படுத்தலாம்.வெப்பெண்ணை  தெளித்தல், கீழ்மட்ட இலைகளின் அடிப்பாகத்தில் விசை தெளிப்பான் மூலம்  தண்ணீரை பீய்ச்சி அடித்தல், கரும்பூசனத்தை அழிக்க மைதா கரைசல் 5 சதவீதம்  தெளித்தல், மரங்களில் மஞ்சள் நிற ஒட்டுபொதிகள் கட்டுதல், தோப்பை சுற்றியும்  சீதாப்பழ மரம் வளர்த்தல் மூலம் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என  விளக்கினர். மேலும் துண்டு பிரசுரங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா