சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல்

 

கோவை, மார்ச் 15: கோவை கணபதி- செக்கான் தோட்டம் பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட் அகற்றி பொதுமக்கள் சென்று வர இணைப்பு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 3 வருடமாக சுரங்க பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து செக்கான் தோட்டம் பாலன் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்பாதையில் ரயில்கள் தொடர்ந்து வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,“ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கி 3 ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு